அமைச்சர் உதயநிதியின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம்... தமிழக அரசு உத்தரவு..!!
TNGovt ordered skill development Corporation under Udayanidhi
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் துறையின் கீழ் செயல்பட்டு வந்த திறன் மேம்பாட்டு கழகம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயங்கும் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறன் மேம்பாட்டு கழகத்தையும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
English Summary
TNGovt ordered skill development Corporation under Udayanidhi