நெல்லை-சென்னை ரூ.7,500 கட்டணமா...? -ஆம்னி பேருந்து கொள்ளைக்கு எதிராக நயினார் ஆவேசம்
Is fare Nellai Chennai 7500 Nainar outrage against omni bus fare gouging
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளார்.நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரே பயணத்திற்கு ரூ.7,500 வரை வசூலிக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வந்தாலே ஆம்னி பேருந்து கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்வதும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததும் வழக்கமான காட்சியாகி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த கட்டண உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லும் தி.மு.க. அமைச்சர்கள், வெறும் கண் துடைப்புக்கான எச்சரிக்கைகளோடு நின்றுவிடுவதாகவும், ஆனால் பொதுமக்களின் பணம் சுரண்டப்படுவது மட்டும் நிற்கவே இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக கூறினார்.
இந்த பண்டிகை நாள்களில் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப நினைக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் முழு மாதச் சம்பளத்தையே ஆம்னி பேருந்து கட்டணமாக பறித்துவிட்டு, வேடிக்கை பார்க்கும் அறிவாலயம் அரசை, மக்களின் வயிற்றெரிச்சலும் கோபமும் விரைவில் வீழ்த்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Is fare Nellai Chennai 7500 Nainar outrage against omni bus fare gouging