பள்ளி மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை - அதிகாரபூர்வ அறிவிப்பு!
TN School Leave 241222
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
வரும் 23ஆம் தேதி வரை இந்த அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

காலை வேளையில் 6,8,10,12ம் வகுப்புகளுக்கான எழுத்துத் தேர்வுகளும், 7,9,11ம் வகுப்புகளுக்கான எழுத்துத் தேர்வு பிற்பகல் வேளையில் நடைபெற்று வருகிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறை ஆங்கில புத்தாண்டு வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், வரும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.