விடிய விடிய பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்திய இந்திய ராணுவம்...! 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு...!
Indian Army shoots down Pakistani drones More than 50 drones destroyed
இந்தியாவின் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 3 நாளாக எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதில், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் அறவே முறியடித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானின் ''ட்ரோன் தாக்குதல்'' நடவடிக்கையை தொடர்ந்து முறியடித்து வருகிறது.
இதில், நேற்று இரவு ''பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லைகள் (IB)'' வழியாக பல்வேறு இடங்களுக்கு ட்ரோன்களை செலுத்த முயன்றபோது, இந்திய ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கையால் ஜம்மு, உதம்பூர், நக்ரோட்டா, சம்பா, அக்னூர் மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ''ட்ரோன்கள்'' வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
மேலும், பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனால் இந்திய எல்லையில் வாழும் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
English Summary
Indian Army shoots down Pakistani drones More than 50 drones destroyed