போர் பதற்றம் - நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு...!!
ca exam postpond for wartime
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதாவது இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற இருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நாடு முழுவதும் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ca exam postpond for wartime