மக்களே ரெடியா இருங்க! நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!
TN Rain May Month TN Weather man report
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தாமதிக்காமல், எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொதுவாக ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை, இந்த வருடம் ஏற்கனவே மே 13ஆம் தேதியே தொடங்கலாம் என்ற சாத்தியங்கள் இருப்பதாகவும், மொத்த மழை அளவு வழக்கத்தை விட 5 சதவீதம் அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பருவமழை தாமதமின்றி தொடங்குவதால், கடும் வெயில் அடிக்க வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.
மேலும், மே மாதம் முழுவதும் கடந்த வருடங்களைப் போல இல்லாமல், வெப்பத்தடம் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் குறிப்பாக மதுரை சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் அதன் புறநகரங்களில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலான அளவில் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
TN Rain May Month TN Weather man report