சீமான் மீது பாய்ந்தது வழக்கு! பின்னணியில் திமுக ஆட்சிக்கு வர காரணமான பிகார் பிரசாந்த் கிஷோர்! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், வட மாநில தொழிலாளர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்த வீடியோவை பிகார் மொழியில் மொழி பெயர்ப்பு செய்து, "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்கவில்லை, சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதன் காரணமாக விரைவில் சீமான் மீது ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால், இந்திய தண்டனை சட்டம் 153(B)(c), 505(1)(c),506(1) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீமான் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமுதாயத்தினர் குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்ததாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police Case file against Seeman 12032023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->