#BREAKING | அமைச்சராகிறாரா உதயநிதி? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் திடீர் மாற்றம்.! சற்றுமுன் வெளியான தகவல்.!
TN ministers meet date change and some info
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பற்றிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம் எம்எல்ஏ.,வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பல அமைச்சர்களும், திமுக மூத்த நிர்வாகிகளும் முன்வைத்து வருகின்றனர்.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என்று திமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 29ம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியது.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை, பரந்தூர் புதிய விமான நிலையம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயத்தில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
TN ministers meet date change and some info