இனி 1 முதல் 10-ம் வகுப்பு வரை., பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு ஒன்றை தமிழக அரசு செய்துள்ளது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்பட்டு உள்ளது. 

மேலும், 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது

மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் பயின்ற பயிற்றுமொழியை EMIS இல் பதிவு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கோரப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் பயின்ற பயிற்று மொழி மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம், தமிழ் வழியில் பயின்று அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோருபவர்களுக்கு இது வழிவகை செய்யும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order for tamil way education


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->