ஆளுக்கு தலா 5 ஆடுகள்., அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.! தகுதி என்ன?., முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கால்நடை துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

அதில், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38800 பெண்களுக்கு ஐந்து செம்மறி அல்லது வெள்ளாடுகள் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக 75.63 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும். இதற்காக ஒரு லட்சத்து 96 ஆயிரம் ஆடுகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் பின்வருமாறு:

* பயனாளிகளில் குறைந்தது 30% பேர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* நிலம் இல்லாத விவசாய தொழிலாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

* பயனாளர்கள் ஏற்கனவே ஆடு, மாடுகள் வைத்திருக்கக்கூடாது.

தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கவும், அவர்களுக்கு ஆடுகள் வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறை இணை இயக்குனர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது" என்று அந்த அரசாணையை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order for free Goat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->