#Breaking: திருமண இ-பதிவு விவகாரம்.. புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளேயும் - வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அதிகளவு விண்ணப்பம் பெறப்பட்டதால் அது முடக்கப்பட்டது. பின்னர் மீண்டும் திருமணத்திற்கு செல்ல இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், திருமண இ-பதிவு நடைமுறையில் ஏராளமானோர் விண்ணப்பித்து வரும் நிலையில், அதனை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதன்படி, திருமண பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். 

ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால், யார்? யார்? வருகிறார்கள் என கேட்டறிந்து, திருமண வீட்டார் ஒரே திருமண இ-பதிவை பதிவு செய்துகொள்ளலாம். 50 நபர்களுக்கு மிகாமல் தங்களின் திருமணத்தை நடத்தி கொள்ளலாம்.

திருமண வீட்டார் சார்பில் ஒருவர் திருமண தேதி, திருமணத்திற்கு வருபவர்கள், திருமணத்திற்கு வருபவர்களின் வாகன எண்கள் மற்றும் அலைபேசி எண்கள், ஓட்டுனர்களின் விபரம் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். ஒரு திருமணத்தில் இரண்டு இ-பதிவு போன்றவை பதிவு செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

திருமணத்திற்க்கு வரும் நபர்கள் தங்களது அடையாள அட்டை, திருமண வாகன ஓட்டுனர்கள் தங்களின் வாகன உரிமம் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகள் இ-பதிவை கேட்டால், அதனை காண்பித்து திருமண இல்லத்திற்கு பயணம் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Announce TN E Pass For Marriage New Rules 19 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->