தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையா? தமிழக ஆளுநர் மாளிகை கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


"பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக பரவும் தகவலை நம்ப வேண்டாம்" என்று ஆளுநர் மாளிகை சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், பீகார் மாநில நபரின் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பரவும் தகவல் பொய்யானது.

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்று ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தனி நபருக்கு எதிரான எந்த தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் தமிழக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு விளக்கத்தையும் தெரிவித்துள்ளது.

இப்படியான பொய்யான, தவறான தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் ஆளுநர் மாளிகை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor warn about fake news


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->