தமிழ்நாட்டில் மூத்த அதிகாரிகள் உட்பட 38 ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்!
TN government IAS transfer order
தமிழக அரசு 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டிருந்த கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, மீண்டும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கேத் திரும்பியுள்ளார்.
மகேஸ்வரி ரவிக்குமார், கைத்தறி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாதுரை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்கிறார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங், தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமயமூர்த்தி உயர்கல்வித்துறை செயலாளராகவும், மதுமதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பதவி ஏற்கிறார்.
ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமார் ஜயந்த், வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை மற்றும் கூட்டுறவு துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


English Summary
TN government IAS transfer order