இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை...பாகிஸ்தான் மீண்டும் அடாவடி!
Indian flights banned from flying for another month Pakistan is up to its old tricks again
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பயங்கர அடி விழுந்து. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் தாக்குதல் நிறுத்தப்பட்டன.முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்ததால் அதற்கு போட்டியாக, பாகிஸ்தான் தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian flights banned from flying for another month Pakistan is up to its old tricks again