அதிகாலை கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
Early morning tragic accident Death toll rises to 6
தஞ்சாவூர் அருகே அரசு பஸ் - வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து கொண்டு இருந்தனர்.அப்போது அதேநேரத்தில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
செங்கிப்பட்டி மேம்பாலம் அருகே தார்சாலை அமைக்கும் பணி நடந்து வந்ததால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ்சும் வேனும் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்போது வேனில் வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வேனில் வந்தவர்களில் காயம் அடைந்த ஆண் ஒருவர், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்தார்.தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், தஞ்சாவூர் அருகே அரசு பஸ் - வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
Early morning tragic accident Death toll rises to 6