தமிழகத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

நாளொன்றுக்கு நான்கரை லட்சம் பேர் வரை இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மீண்டும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. அண்மையில் நோய்த்தொற்று குறைந்ததை அடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியது. 

இதன் காரணமாக இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ என்று, மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் இன்றைய நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,591 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 26,37,010 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுவரை மொத்தம் 25,85,244 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில், 1,537 பேர் நோய்த் தொற்றிலிருந்து இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,549 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை - 212 பேரும், கோவை - 201 பேரும், ஈரோடு - 128 பேரும் , தஞ்சாவூர் - 119 பேரும்c, செங்கல்பட்டு - 116 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn corona update sep 14


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->