அடுத்தடுத்த கொலைகள்... தலைநகர் சென்னை கொலைநகராக மாறி விட்டது - பாஜக குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த வாரம் சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே ஒரு நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அஸ்வத் என்ற நபரை கத்தியால் வெட்டிப் படுகொலை செய்திருப்பது தலைநகர் சென்னை கொலைநகராக மாறி விட்டது என்பதை தெளிவாக்குகிறது. 

அதே நாளில் நந்தம்பாக்கத்திலும் ஒரு படுகொலை நடந்துள்ளது. தெடர்ந்து பொது வெளியில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலைகளில் கூட ரௌடிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது சென்னை நகரம் குற்றவாளிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது என்பதை உணர்த்துகிறது. 

சென்னை நகர சாலைகளில் சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு காவல் துறை தள்ளப்பட்டுள்ளது திராவிட மாடல் திமுக ஆட்சியின் அலங்கோலத்தை காட்டுகிறது. 

இந்த படுகொலைகள் அனைத்தும் இரு சக்கர வாகனங்களில் கும்பலாக வந்து ஒரே மாதிரியான முறையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும், ஆனால் காவல்துறையால் இந்த குற்றங்களை தடுக்க முடியவில்லை என்பதும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. 

அரசியல் தலையீடுகள் தான் இந்த குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கான காரணம். திராவிட மாடல் திமுக ஆட்சியின் அவலம் இது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Chennai Law and order DMK MK STalin govt


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->