மேட்டூர் அணை வரும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும்! நீர்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு!
TN Assembly Mettur Dam open date announce
மேட்டூர் அணை வரும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் பாசனத்திற்கான கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதற்காக மொத்தம் 5,021 கிலோமீட்டர் நீளத்திலான கால்வாய்கள் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளன.
சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் அடிப்படையில் கால்வாய் தூர்வாரும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மே மாதம் முடிவதற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் நோக்கத்தில், மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.
English Summary
TN Assembly Mettur Dam open date announce