சட்டமன்றத்தில் நுழைய எடப்பாடி பழனிசாமிக்கு தடை! அதிமுக எம்எல்ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சிகள் விஷ சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து, தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

பாமக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ளனர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் ராஜினாமா செய் என்ற பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

அப்போது சபாநாயகர், எதிர்க்கட்சிகள் மிரட்டல் விடுத்து முற்றுகையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். சட்டப்பேரவையை முடக்கும் சூழ்நிலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். 

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர், கவனயீர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பேரவையில் அமலியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் சட்டப்பேரவை குறிப்பில் இடம் பெறாது. விதிகளை மீறி நடந்து கொண்டதால், இன்று ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly ADMK Edappadi Planisamy EPS MLA


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->