திருவாரூர் | 4 அடி ஆழத்தில் கிடைத்த உலோக சுவாமி சிலைகள்! ஐம்பொன் சிலைகளா? என பரபரப்பு!
Tiruvarur Metal idols Swami Statues
திருவாரூர் , நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இதற்காக அந்த பகுதியில் நேற்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோன்றிய போது சுமார் 4 அடி ஆழத்தில் பல உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் வட்டார ஆட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்டெடுக்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டனர்.

இதில் நடராஜர், விநாயகர், முருகர் உள்பட 14 உலோக சுவாமி சிலைகள் இருந்தன. இதனை அடுத்து வட்டார ஆட்சியர் அலுவலகத்திற்கு அனைத்து சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் தெரிவித்திருப்பதாவது, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகள் என உறுதி செய்யப்பட்டால் இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என்றனர்.
English Summary
Tiruvarur Metal idols Swami Statues