வயதான மூதாட்டிகளை குறிவைத்து, கடத்தி நகை, பணம் பறித்த கும்பல்.. அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


நூதன முறையில் மூதாட்டிகளை குறிவைத்து கடத்தி நகையை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பல் வந்தவாசி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி - திண்டிவனம் சாலை, அண்ணாநகர் பகுதியை சார்ந்தவர் அலமேலு. இவர் கடந்த 25 ஆம் தேதி வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார். இதன்போது, அவ்வழியே காரில் வந்த 3 நபர்கள், அலமேலு எங்கே செல்கிறார் என விசாரித்து, நாங்களும் அவ்வழியாகத்தான் செல்கிறோம் என்று கூறி அவரை காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். காருக்குள் ஏறி செல்கையில், அலமேலுவுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். 

காரில் இருந்தவர்கள் நல்லவர்கள் போல பேசியதால், அவர்களின் பேச்சை நம்பிய அலமேலுவும் அதனை குடிக்கவே சிறிது நேரத்தில் மயங்கி இருக்கிறார். பின்னர், அவரிடம் இருந்த 6 சவரன் தாலி, கம்மல் உட்பட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, அவரை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள சாலையில் மயக்க நிலையிலேயே விட்டுச்சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அலமேலு, பொதுமக்கள் உதவியுடன் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

இதன்பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அலமேலுவின் கணவர் சக்கரவர்த்தி வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்தனர். இன்று காலை வந்தவாசி அருகேயுள்ள மும்முனை புறவழிச்சாலை பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுகையில், அலமேலுவிடம் கடத்தல், கொள்ளை செயலில் ஈடுபட்ட கார் வந்துள்ளது. 

காரில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களை வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மேற்கொண்ட விசாரணையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியை சார்ந்த விஜயகுமார், அவரது தந்தை வாசுதேவன், உறவினர் சாரதா ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் பலரிடமும் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதியாகவே, 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் 6 சவரன் நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர். 

இவர்கள் 3 பேரும் சேர்ந்து காரில் பயணம் செய்து, தங்களை குடும்பமாக பாவித்துக்கொண்டு சாலைகளில் ஆட்கள் துணையில்லாமல் செல்லும் 50 வயது முதல் 60 வயது வரையிலான மூதாட்டியை குறிவைத்து காரில் கடத்தி சென்று கொள்ளையடித்து அம்பலமாகியுள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Vandavasi Police Captured Kidnap and Jewel Robbery 3 Man Gang


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal