திருவண்ணாமலை வைகாசி பவுர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம் அறிவிப்பு! 
                                    
                                    
                                   Tiruvannamalai Temple girivalam Pournami Girivalam time 
 
                                 
                               
                                
                                      
                                            திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூன் 10ஆம் தேதி பகல் 12.32 மணி முதல் ஜூன் 11ஆம் தேதி பகல் 1.52 மணி வரை பவுர்ணமி திதி தொடரும். இந்த நேரத்திலேயே பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி திருக்கோவிலில் (நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலம்)  வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் கருணாசுவாமி ஆலயம்:
தஞ்சாவூர் அருகே கரந்தையில் முற்கால சோழர்களால் கட்டப்பட்டதும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய நாயகி உடன் கருணா சுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Tiruvannamalai Temple girivalam Pournami Girivalam time