50க்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்... கதறும் மக்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், ஆர்.கே. பேட்டை எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000 ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

பல்வேறு ஆண்டுகள் ஆகியும் ஒரு சிலர் மட்டுமே அந்த பகுதியில் அந்த பகுதிகளில் வீடுகளை கட்டியுள்ளனர். இதற்கு இடையே கலந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது எனவும் அந்த இடத்தில் யாரும் வீடுகளை கட்டக்கூடாது எனவும் இதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். 

இருப்பினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள மக்கள் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இந்நிலையில் இன்று காலை ஆர்.கே. பேட்டை தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் 6 ஜே சி பி இயந்திரங்களை கொண்டு அனுமதி இன்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் வீடு கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர். 

சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvallur demolition 50 houses


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->