செத்துப்போன கட்சியை வளர்க்க இப்படியான அரசியல் - காங்கிரசை கழுவி ஊற்றிய வானதி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டம் தொடர்பான விவகாரத்தில் இரட்டை வேடம் பதிவு செய்கிறது என வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டினை முன்வைத்தார். 

திருப்பூர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலைக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வரே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டம் தொடர்பான விவகாரத்தில் இரட்டை வேடம் பதிவு செய்கிறது. உத்திரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருவதால், செத்துப்போன தனது காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. 

வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளின் வாழ்க்கை உயர்ந்துவிடும் என்ற வன்மத்தில் காங்கிரஸ் அதனை தடுக்க முயற்சி செய்கிறது. இந்தியாவை சார்ந்த அனைத்து மாநில முதல்வர்களும் கடிதம் எழுதினாலும், நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. திமுக மாணவர்களை ஏமாற்றாமல், எதார்த்த நிலையை புரிந்து ஆட்சி செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur BJP MLA Vanathi Srinivasan Pressmeet 5 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->