கந்துவட்டி கொடுமையால் விபரீத முடிவெடுத்த 22 வயது இளைஞர்.. ஆம்பூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரப்பட்டு பகுதியை சார்ந்தவர் செல்வம். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவரது மகன் சிரஞ்சீவி (வயது 22). சிரஞ்சீவி வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

செல்வத்தின் மனைவி மல்லிகா மற்றொரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது குடும்ப வறுமை காரணமாக அரசு வழங்கிய வீட்டினை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக குடியாத்தம் பகுதியை சார்ந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் பணத்திற்கு அடமானம் வைத்துள்ளார். 

இந்த தொகையை மாதம் ரூ.7,500 என்ற அடிப்படையில் 24 மாதத்தில் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையும் சரியாக செலுத்தப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியுடன் தவணை நிறைவுபெற்றுள்ளது. ஆனால், கொரோனா பரவல் வருமானம் இல்லாததன் காரணமாக 3 மாதங்கள் கடன் தொகை நிலுவையில் இருந்துள்ளது. 

இந்த பணத்தை வசூல் செய்ய நிதி நிறுவனத்தில் இருந்து நேற்று முன்தினம் 8 பேர் கொண்ட கும்பல், சிரஞ்சீவின் வீட்டிற்கு வந்து அவர்களை அவதூறாக பேசி வீட்டினை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த சிரஞ்சீவி, ஜோலார்பேட்டை அருகேயுள்ள இரயில் தண்டவாளத்தில் இரயில் வரும் போது பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சிரஞ்சீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், கந்துவட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Ambur youngster suicide due to Usury interest problem


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal