திருப்பத்தூர் | தரமற்ற முறையில் கட்டப்படும் அங்கன்வாடி மையம்! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பொதுமக்கள்!
Tirupathur bad quality anganwadi center built
வாணியம்பாடி அருகே புதிதாக கட்டி வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் தர மற்ற நிலையில் இருப்பதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்:
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்து உள்ள வளையாம்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை அகற்றி விட்டு, அதே இடத்தில் மற்றொரு அங்கன்வாடி மையம் கட்டி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நிறைவேற்றும் வகையில், ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தற்போது அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தரமற்ற பொருட்களை வைத்து, தரமற்ற முறையிலும் காட்டுவதால், அங்கன்வாடி மைய கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் அதன் தூண்கள் எளிதாகவே கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் மிக மோசமான நிலையில் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குறைசாட்டி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், ‘‘வளையாம்பட்டு ஊராட்சியில் குழந்தைகள் படிப்பதற்காக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டிடம் தரமற்ற பொருட்களை வைத்து கட்டுவது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக வந்து கட்டிட பணியை ஆய்வு செய்து, அடித்தள கட்டடிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு தரமான பொருட்களை வைத்து புதிய கட்டிடத்தை கட்டுவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்’’ என்ன தெரிவித்தனர்.
English Summary
Tirupathur bad quality anganwadi center built