நெல்லை பட்டியல் இன பள்ளி மாணவன் தாக்குதல் விவகாரம்: இன்ஸ்பெக்டர் மகனை தவிர்த்துவிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல் விவகாரத்தில், தாக்குதல் நடத்திய மாணவர்களில் இன்ஸ்பெக்டர் மகனை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற ஆறு மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதலில் 12ஆம் வகுப்பு பயிலும் பட்டியல் இன மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்கப்பட்ட மாணவன் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாணவர்கள் சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்த விவகாரத்தை பொருத்தவரை, காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மகன் நீங்கலாக ஆறு மாணவர்கள் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli valliyur school student attack case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->