பாமாயில் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான கலப்பட பனீர் பறிமுதல்; தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..! - Seithipunal
Seithipunal


பாமாயில் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து போலி பனீர் தயாரித்து வந்த தொழிற்சாலை குஜராத் மாநிலம் சூரத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 03 லட்ச ரூபாய் மதிப்பிலான கலப்பட பனீரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது குறிப்பிட்ட சில பிராண்டுகளில் தயாரித்து விற்கப்பட்ட பனீரை சாப்பிட்டு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அப்போது உபாதைக்கு காரணமான பனீரை ஸ்மெல் செய்து பார்த்ததில் அதில் பாமாயில் எண்ணெயின் வாடையே வீசிய நிலையில் அதிர்ச்சி அடைந்த சிலர், அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்ததுள்ளனர்.

புகாரை அடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், குஜராத் மாநிலம் சூரத்தின் பண்டேசரா தொழிற்சாலை பகுதியில் இயங்கிவந்த இந்த போலி பனீர் ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டி கட்டியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த பனீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது முழுக்க முழுக்க போலியாக, பாமாயிலும் அசிட்டிக் அமிலமும் கலந்து தயாரிக்கப்பட்ட பனீர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஆலை உரிமையாளர் மகேஷ்குமார் சர்மாவை போலீசார் கைது செய்து விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 401 கிலோ கலப்பட பனீரை பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மார்க்கெட் மதிப்பு 3 லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல 25 லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adulterated paneer worth Rs 3 lakhs made with palm oil and acetic acid seized


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->