ஆன்லைன் கேம்-ஆல் வந்த வினை; கன்னியாகுமரி மாணவிடம் ஆபாசமாக பேசிய வீடியோவை வைத்து மிரட்டிய உத்தரப்பிரதேச இளைஞர்; அதிரடி காட்டிய போலீசார்..!
A youth from Uttar Pradesh who threatened a Kanyakumari student with a video of him talking obscenely has been arrested
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைன் கேம் விளையாடுவதில் அடிமை ஆன நிலையில், செல்போனில் ஆன்லைன் கேம்களை டவுன்லோடு செய்து அண்டைமில் விளையாடி வந்துள்ளார்.
அப்போது உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் அவருடன் வீட்டிற்கு தெரியாமல் வீடியோ கால் மூலம் பழகி, ஆபாச உரையாடல்கள் நடத்தி வந்துள்ளார்.
குறித்த இளைஞர் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியா நிலையில், குறித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 21 வயதான அஜய் என்பது தெரிய வந்துள்ளது.
உடனே கன்னியாகுமரி மாவட்ட போலீசார் உத்திரபிரதேச மாநிலத்திற்கு விரைந்து சென்ற குற்றவாளி அஜயை கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்துள்ளனர். விசாரணையில் ஆபாச வீடியோவை காட்டி மாணவியை மிரட்டியது உறுதியாக போக்சோ வழக்கில் அஜய் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A youth from Uttar Pradesh who threatened a Kanyakumari student with a video of him talking obscenely has been arrested