தாய்லாந்தில் பதைபதைக்கவைக்கும் நிகழ்வு; பள்ளி ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு; 07 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் பள்ளி ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 07) காலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தாய்லாந்து தலைநகருக்கு வடமேற்கில் அமைந்துள்ள பாங் க்ருவாய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் பதின்ம வயதுடைய மாணவர் என்று கூறப்படுகிறது.

கைத்துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர் தாக்குதலுக்கு பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அதை போலீஸ் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் பிரசெர்ட் சந்தரருவாங்தோங், பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் துப்பாக்கி உரிமம் சுமார் 10 மில்லியன் பேர் துப்பாக்கி உரிமம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது வீட்டில் இருந்த தாத்தா, பாட்டியை கொலையாளி சுட்டுக் கொன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 அதன் பின்னர் பள்ளிக்கு வந்து சுமார் 26 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 07 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர் மாணவர் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு தாய்​லாந்து பிரதமர் அனு​தின் சர்ன்​வி​ராகுல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 killed in student shooting at school in Thailand


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->