'ஒரு ஊசியால் முடிந்த இளம் உயிர்'...! - சென்னையில் போதை ஊசி செலுத்திய இளைஞர் பரிதாப பலி...!
young life ended with a single injection young man who injected drugs Chennai tragically died
போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கிய சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தொடர்ந்து போதை ஊசிகளை பயன்படுத்தியதால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் தீவிரமடைந்த நிலையில், போதை மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கத்திற்கும் அவர் ஆளாகியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக போதை ஊசிகளை பயன்படுத்தியதால் ஆகாஷின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அடிக்கடி போதை ஊசியை உடலில் செலுத்திக் கொண்டதன் காரணமாக அவரது நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இளைஞரின் உயிரிழப்பு தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.ஆகாஷுக்கு போதை ஊசிகள் எங்கிருந்து கிடைத்தன? அவற்றை விநியோகித்தவர்கள் யார்? போதை ஊசிகளை பயன்படுத்தும் நபர்கள் யார்? இந்தப் பழக்கத்தின் பின்னணியில் செயல்படும் நபர்கள் உள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னையில் போதை ஊசிகளின் புழக்கம் குறித்து தகவல்களை சேகரித்து, அவற்றின் விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலியை கண்டறியும் நடவடிக்கைகளிலும் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
young life ended with a single injection young man who injected drugs Chennai tragically died