அமெரிக்க குடியுரிமை விதிகளில் அதிரடி மாற்றம்...! டிரம்ப் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகளால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


ஒரு குழந்தை பிறக்கும் இடமே அதன் எதிர்கால குடியுரிமையை தீர்மானிக்கும் சூழல் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைக்கு குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்ப்பிணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுக்கும் நடைமுறை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

பணி, கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் போது அங்கே குழந்தை பிறந்தால், சில நாடுகளின் சட்டங்களின்படி அந்தக் குழந்தைக்கு பிறந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதையே திட்டமிட்டு பயன்படுத்தி, சுற்றுலா செல்வது போல் வெளிநாட்டிற்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்து குடியுரிமை பெற முயற்சிக்கும் நடைமுறையே “பிறப்பு சுற்றுலா” எனப்படுகிறது.

உயர்தர கல்வி, மேம்பட்ட மருத்துவ வசதிகள், சிறந்த வேலைவாய்ப்புகள், பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கத்திய நாடுகளில் குடியேற வேண்டும் என்ற விருப்பம் சிலரிடம் உள்ளது.இதனால், குழந்தை பிறந்தவுடன் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்புள்ள நாடுகளைத் தேர்வு செய்து, அங்கு சென்று குழந்தையைப் பெற்றெடுக்கும் நடைமுறை சிலரிடம் காணப்படுகிறது.குறிப்பாக அமெரிக்காவில் இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கி வருகிறது.

பிறப்பு சுற்றுலா மூலம் குடியுரிமை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டின் குடிமக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நல வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.அமெரிக்காவின் இடம்பெயர்வு கொள்கை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 22 ஆயிரம் முதல் 26 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு சுற்றுலா மூலம் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை கட்டுப்படுத்தும் நோக்கில் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறைக்கு நீண்ட வரலாறு உள்ளது.அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கருப்பின மக்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக 1868-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் அமெரிக்க மண்ணில் பிறந்தவர்களுக்கு, முன்னாள் அடிமைகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சட்ட அடித்தளம் வலுப்பெற்றது.இந்த நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாக உத்தரவை பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான சட்டப் போராட்டம் அமெரிக்காவில் பெரும் கவனத்தை பெற்றது.இதற்கிடையே, டிரம்ப் அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த மக்களின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட சட்ட நடைமுறை தற்போது வேறு விதமாக பயன்படுத்தப்படுவதாக விமர்சித்தார்.டிரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த மக்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை நடைமுறை உருவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த நடைமுறையை சிலர் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்” என்று விமர்சித்தார்.இதுகுறித்து வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், சிலர் சுற்றுலா பயணிகள் என்ற அடையாளத்தில் அமெரிக்காவுக்கு வருவதாகவும், ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் குழந்தையைப் பெற்றெடுத்து அதன் மூலம் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

குழந்தைக்கு குடியுரிமை கிடைத்த பின்னர், எதிர்காலத்தில் அமெரிக்க அரசின் நலத்திட்ட உதவிகள், வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்றும் அவர் கூறினார்.இந்த நடைமுறையை கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும், பிறப்பு சுற்றுலாவை கண்காணிக்கும் வகையில் புதிய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dramatic change US citizenship rules Trump new restrictions cause stir


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->