திருச்செந்தூரில் பயங்கரம்... ஓய்வுபெற்ற பேராசிரியையை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற மகன் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையான தாயை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.குமாரபுரம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அன்புமணி.

இவரது மனைவி ரேணுகா (62), ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தங்க பாலன் (27), கடந்த 3 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் ரேணுகாவும், அவரது இளைய மகன் தங்க பாலனும் மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது திடீரென வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்த தங்க பாலன், தனது தாயின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ரேணுகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாயை கொலை செய்த பின்னர், நடந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து சென்னையில் பணியில் இருந்த தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணன், உடனடியாக உறவினர்களுக்கும் காவலர்களுக்கும் தகவல் அளித்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் திருச்செந்தூர் தாலுகா காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ரேணுகாவின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து தங்க பாலனை காவலர்கள் கைது செய்தனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் காவலர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயை மகனே கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruchendur son who beat retired professor death machete arrested


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->