''பேரரசர்கள் மதம், சாதி, சமூகம் அல்லது பிராந்தியத்துக்கு அப்பாற்பட்டவர்கள்''; பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய ராம்நாத் கோவிந்த் பேச்சு..!
Ram Nath Kovind says emperors are beyond religion caste community or region
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.
நான்கு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மணிமண்டபம் சென்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
இங்கு பூஜை செய்வதற்காகவும், இந்த மண்ணை ஆட்சி செய்த பேரரசர் சுவர்ண மாரனுக்கு தனது மரியாதையை செலுத்துவதற்காகவும் வந்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு பேரரசரும் சமூகம், சாதி, மதம், இன, மொழி ஆகிய எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர் என்றும், எந்த ஒரு மன்னரையும் குறிப்பிட்ட மதம், சாதி, சமூகம் அல்லது பிராந்தியத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஒரு பேரரசர் எப்போதும் இவற்றுக்கு அப்பாற்பட்டவராகவே இருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும், எந்த அரசாங்கத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்காக நான் இங்கு வரவில்லை என்றும், அரசியல் தொடர்பான எந்த விஷயத்தையும் பேசுவது எனது நோக்கம் அல்ல என்று கூறினார். அத்துடன், இந்த மாமன்னருக்கு எனது முழுமையான மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துவதற்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
English Summary
Ram Nath Kovind says emperors are beyond religion caste community or region