கால அவகாசம் வேண்டும்..மாணவர்களுக்காக கொதித்தெழுந்த சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம்!
Time is needed The boiling and rising Student Parents Welfare Association for the students
சென்டாக் நிர்வாகம் 26-8-2025 வரை மருத்துவம் படிக்க சேர கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறித்தியுள்ளது .
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறியதாவது: சென்டாக் நிர்வாகம் கடந்த 18-8-2025 ஆம் தேதி மருத்துவம் படிக்க முதல் சுற்று மாணவர் சேர்க்கைகான பட்டியலை வெளியிட்டு 23-8-2025-க்குள் அரசு இடஒதுக்கீட்டிற்கு 4-லட்சமும் நிர்வாகா இடஒதுக்கீட்டிற்கு 16-லட்சத்து 80ஆயிரமும்,NRI இடஒதுகீட்டிற்கு 21-லட்சமும் சென்டாக் நிர்வாகத்தில் கல்வி கட்டி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.
சென்டாக் அறிவிப்பின் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு முன் பெற்றோர்கள் தனியார் கல்லூரிகளில் விசாரிக்கும் போது 1-லட்சத்து 22-ஆயிரம் முதல் 2-லட்சம் வரை கூடுதல் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தியதால் குறைந்த காலகொடுவுக்குள் பெற்றோர்கள் அரசு அறிவித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை தயார் செய்ய கால அவகாசம் இல்லாத காரணத்தால் அதிக அளவில் மாணவர்கள் பணம் கட்டி சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே வருகின்ற 26-8-2025 வரை மாணவர்கள் பணம் கட்டி மருத்துவ படிப்பில் சேர கால அவகாசம் கொடுக்க ஆளுநர், மற்றும் முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நலன் கருதி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் MCC நிர்வாகம் இரண்டாம் சுற்று கலந்தாய்வு 29-8-2025-க்கு பிறகு இருக்கும் என்று அறிவித்துள்ளதால் சென்டாக் நிர்வாகம் கால அவகாசம் அளிப்பதால் கலந்தாய்வில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையும் நினைவு கூறுகின்றோம் என புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறித்தியுள்ளது .
English Summary
Time is needed The boiling and rising Student Parents Welfare Association for the students