புலிக் குன்றில் புலி சாவு...! கிணற்றின் அடியில் புலி சடலம் கிடந்ததன் காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் புலிகள் அரிதாகவே கண்ணில் படும் நிலையில், நேற்று அந்தப் பகுதியில் பதற்றம் பரவச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

கீழ்கோத்தகிரி அருகே உள்ள கடசோலை வனப்பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றின் அடியில் புலி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதை வேட்டை தடுப்பு காவலர்கள் முதலில் கவனித்தனர்.

​உடனடியாக தகவலறிந்த கீழ்கோத்தகிரி வனச்சரகர் முத்துராஜா தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புலியின் உடலை மீட்டு விசாரணை ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு, புலியின் உடல் மீது விவரமான உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் வழக்கமான நடைமுறையின்படி புலி அடக்கம் செய்யப்பட்டு அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.
புலி எந்த காரணத்தால் கிணற்றில் விழுந்தது? இயற்கை காரணமா, மனித அலட்சியமா? என்பதற்காக வனத்துறை தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiger dies Tiger Hill What reason tigers body lying bottom well


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->