தாறுமாறாக ஓடிய கார் - தாய் உள்பட 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தாறுமாறாக ஓடிய கார் - தாய் உள்பட 3 பேர் பலி.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர், தனது மகன்கள் ஆதி முகிலன், அகிலன் மற்றும் உறவினர் ஆதிசரண் உள்ளிட்டோருடன் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்துக்கு காரில் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.

இந்தக் காரை சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியைச் சேர்ந்த பி.சந்தோஷ் என்பவர் காரை ஓட்டினார். இந்த நிலையில் இவர்கள் திருமயம் அருகே செபஸ்தியார்புரத்தில், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.

அப்போது, எதிர் திசையில், சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, கார் மீது மோதியதில், பேருந்தின் அடியில் கார் சிக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரருடன் விரைந்து வந்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு பேருந்துக்குள் சிக்கிய காரை மீட்டனர். இந்த விபத்தில் ஆதிமுகிலன், கார் ஓட்டுநர் சந்தோஷ் உள்ளிட்டோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ராஜேஸ்வரி, ஆதிசரண் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். 

இவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் பயணம் செய்த ஆதிசரண், அகிலன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died accident in sivakangai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->