அரிய வகை நோயால் அவதிப்படும் 3 மாதக் குழந்தை.! ஊசி போட பணம் இல்லாமல் தவிக்கும் அவலம்.!
three month baby affected rare disease in coimbatore
அரிய வகை நோயால் அவதிப்படும் 3 மாதக் குழந்தை.! ஊசி போட பணம் இல்லாமல் தவிக்கும் அவலம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார் - ஜனனி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து மூன்று மாதமே ஆன ஆண் ஒன்று குழந்தை உள்ளது. ஆனால், அந்தக் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், குழந்தையில் பெற்றோர்கள் அரசிடம் உதவி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது, "தங்கள் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை குணப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டபோது அனைத்து மருத்துவர்களும் Zolgen SMA என்ற ஊசியை செலுத்த வேண்டும் என்றும், அந்த ஊசியின் மதிப்பு 16 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில், ரூ.16 கோடியை தங்களால் திரட்ட முடியாது என்பதால், தங்கள் நண்பர்கள் உதவியுடன் IMPACT GURU என்ற செயலி மூலம் பணத்தை திரட்ட முயற்சி செய்து வருகிறோம். அதில் உதவ முன்வருபவர்களிடம் இருந்து 7845723752 என்ற UPI(PhonePe) மூலமும் பணத்தை பெற்று வருகிறோம்.
இருப்பினும், ஒரு சிலர் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதை நம்ப மறுக்கின்றனர். இதனால், தங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.
குழந்தையின் பிரச்சினையை கவனத்தில் கொண்டு தமிழக முதலமைச்சரும் தங்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தற்போது குழந்தைக்கு தொடையிலிருந்து முட்டி வரை தசைநார் சிதைவு பாதித்துள்ள நிலையில் விரைவில் இந்த நோயை குணப்படுத்த வேண்டும், இல்லையெனில் ஒவ்வொரு பாகமாக தசைகள் பாதிக்கப்பட்டு நுரையீரலும் பாதிப்படையும் என்று மருத்துவர்கள் கூறியதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
English Summary
three month baby affected rare disease in coimbatore