3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - இதுதான் காரணமா?
three days holiday to tasmac shop in kanniyakumari
3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - இதுதான் காரணமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’விநாயகர் சதுர்த்தி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை இன்று செப்டம்பர் 22ம் தேதி முதல் மூன்று நாட்கள் செயல்படாது" என்றுத் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட கடைகளில் நேற்றிரவே ‘குடி’மகன்கள் கைநிறைய பாட்டில்களை வாங்குவதற்காக திரண்டுள்ளனர்.
English Summary
three days holiday to tasmac shop in kanniyakumari