ஜூலை 1 முதல் மாறப்போகும் 'அந்த' முக்கிய கட்டணங்கள்...! பாஸ்போர்ட், ஆதார் வைத்துள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...! - Seithipunal
Seithipunal


ஜூலை 1 முதல் பொதுமக்களின் அன்றாட செலவிலும் நிதி திட்டமிடலிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. ஆதார் சேவைகள் முதல் பாஸ்போர்ட் கட்டணம், வாகன விலை உயர்வு முதல் கிரெடிட் கார்டு விதிகள் வரை பல்வேறு துறைகளில் புதிய நடைமுறைகள் அறிமுகமாக இருப்பது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் மின்னஞ்சல் முகவரியை இணைக்க இதுவரை ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை இந்த சேவையை கட்டணமின்றி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சலுகை மூலம் ஆதார் விவரங்களை புதுப்பிக்க விரும்பும் லட்சக்கணக்கான பயனாளர்கள் நேரடியாக பயன்பெற உள்ளனர்.வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு முக்கியமான மாற்றமாக பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் அவசர தேவைக்காக விண்ணப்பிக்கப்படும் தட்கல் சேவைக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணத் திட்டமிடலில் கூடுதல் செலவினம் தவிர்க்க முடியாததாகியுள்ளது.புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சுமை காத்திருக்கிறது. பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகன விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் விலை, பிரிவு மற்றும் மாடலைப் பொறுத்து 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகன சந்தையிலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கும் பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் இனி வெகுமதி புள்ளிகள் வழங்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேலும், சில கார்டுதாரர்கள் உள்நாட்டு விமான நிலைய ஓய்வு அறைகளை 3 மாதத்திற்கு 3 முறை வரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால், இந்த சலுகையை பெற ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் செலவழித்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மேலும் சில மாற்றங்களும் நடைமுறைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே ஜூலை 1 முதல் அமலாகும் இந்த புதிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those important fees that change from July 1 Those passports and Aadhaar must know


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->