தவெக எம்.எல்.ஏ செஞ்சது பெரும் குற்றம்...! ரேஷன் அரிசியை நலத்திட்டமாக வழங்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி முழக்கம்...! - Seithipunal
Seithipunal


மதுரையில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி தொடர்பாக வெடித்துள்ள புதிய சர்ச்சை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் அரிசி விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது,"மதுரையில் முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மற்றும் எளிய மக்களுக்காக அரசு வழங்கிய ரேசன் அரிசி முறைகேடாக நலத்திட்ட உதவியாக விநியோகிக்கப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி மீது எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காக அரசு இலவசமாக வழங்கும் அத்தியாவசிய பொருட்களை, தனிப்பட்ட உதவி போல சித்தரித்து விளம்பரப்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரிய செயல். இது பொதுமக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும், விநியோகிக்கப்பட்ட அரிசி மூட்டைகளில் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், தரமற்ற அரிசி இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆய்வு செய்து, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், விதிமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் அதற்கு துணைநின்றவர்கள் மீது காவலர்கள் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது பதிவில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What Tvk MLA did big crime Nayinar Nagendran slogan action issue providing ration rice welfare scheme


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->