ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி மீனவர்கள்! வெளியாகிய அதிர்ச்சி காரணம்!
Thoothukudi fishermen one day strike
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மீனவர்கள், மீன்வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும் அவரை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் மீனவர்களை பாதிக்கும் வகையில், மீன்பிடி படகுகளுக்கு லைசன்ஸ் வேண்டும்.
4 மீனவர்களுக்கு மேல் ஒரு படகில் மீன் பிடிக்க செல்ல கூடாது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் மீன்பிடி படகுகளுக்கு இன்சூரன்ஸ் கட்ட வேண்டும். பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும்.

படகில் பயன்படுத்தக்கூடிய இஞ்சினுக்கு ஜி.எஸ்.டி பில் வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் சென்ற மீனவர்களுக்கு தகுந்த முறையில் பதில் அளிக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சார்பில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜை கண்டித்தும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்டம் முழுவதும் நாட்டு படகு மற்றும் பைபிள் படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Thoothukudi fishermen one day strike