மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு - தூத்துக்குடி உதவி ஆணையர் கைது.!!
thoothukudi assistant commissner arrest for madurai corporation property tax scam
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ஓய்வு பெற்ற உதவி ஆணையர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டதுடன், பில் ஆட்சியர்கள் உட்பட 19 பேர், 'இடைநீக்கம்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து வருகின்றனர்.
English Summary
thoothukudi assistant commissner arrest for madurai corporation property tax scam