ஒரு பைக்கிற்காக இப்படியா...? கல்லூரி மாணவனின் உயிரைப் பறித்த பிடிவாதம்...! - குடும்பத்தில் பெருஞ்சோகம்...!
this bike stubbornness that took life college student great tragedy family
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலைமணியின் மகன் தேவகுமரன் (18) புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். கல்விக்காக தினமும் செல்ல வசதியாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டிருந்தார்.

ஆனால், அதற்கு மறுப்பு கிடைத்ததால் கடந்த சில நாட்களாக அவர் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.இந்த மன அழுத்தத்தின் பின்னணியில், சம்பவம் நிகழ்ந்த இரவு தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி தூக்கிட்டு தேவகுமரன் உயிரை மாய்த்துக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கோட்டக்குப்பம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குடும்பத்தினரையும் உள்ளூர் மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
this bike stubbornness that took life college student great tragedy family