ஆள் கடத்தல் விவகாரம்... சிக்கிய 4 ஆசாமிகள்! அதிமுக ஒன்றியச் செயலருக்கு போலீசார் வலைவீச்சு.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் மனை வணிகத் தொழில் செய்பவரை கடத்திய வழக்கில் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக ஒன்றிய செயலாளர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

செங்கம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். ஆயுள் காப்பீட்டு கழக முகவராகவும் இருந்து வந்த குணசேகரன் தற்போது சென்னைக்கு சென்று அங்கு மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தனது கல்லூரி நண்பரான திருவண்ணாமலை அருகே உள்ள வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனிடம் குணசேகரன் 2 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதில் 50,000 ஐ திருப்பி செலுத்திய குணசேகரன் மீதமுள்ள தொகையை செலுத்தாமல் தாமதம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குணசீலனை சென்னையில் இருந்து கடத்தி வந்து திருவண்ணாமலை எழில் நகரில் உள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்க வைத்துள்ளனர். 

இதற்கு இடையே குணசீலனின் தங்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாக தகவல் அறிந்து குணசேகரன் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். 

துகுறித்து குணசேகரன் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணன், சபரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai human trafficking case4 arrested


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->