11 ஆம் வகுப்பு மாணவி மரணம்! உடலை எரித்த உறவினர்கள்! அதிர்ச்சியில் போலீசார்! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே 11 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, உறவினர்களே இறுதி சடங்கு செய்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடை பகுதியை சேர்ந்த 16 வயதான மாணவி புவனேஸ்வரி, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி தேர்வில் தோல்வியடைந்ததாக சொல்லப்படுகிறது.

தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டத்தக்கதாக சொல்லப்படுகிறது.

மேலும், மாணவியின் மரணம் குறித்து போலீசாரிடன் தகவல் தெரிவிக்காமலேயே உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்த உள்ளனர்.

இதுகுறித்து ரகசிய தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மாணவி உயிரிழந்தது தற்கொலையா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur school girl mystery death 20052023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->