மனைவி மீது கோபம்.. திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து கொடுமை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


மனைவியின் மீது இருந்த கோபத்தில் அவருக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறி, அவரது புகைப்படத்தை திருமண வரன் தகவல் மையத்தில் பதிவு செய்து பிரச்சனை செய்த கணவன் கைது செய்யப்பட்டான்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர், உளுந்தை கிராமத்தை சார்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி (வயது 32). இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, திருவள்ளூரை அடுத்துள்ள வெளியூர் கிராமத்தை சார்ந்த ஓம் குமார் (வயது 34) என்பவனுக்கு ஜான்சியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 

அமெரிக்காவில் ஜான்சிக்கு வேலை கிடைத்ததை தொடர்ந்து, கணவருடன் சென்று அங்கேயே தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு நான்கரை வயதுடைய ஆண் குழந்தை பிள்ளையாக உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம் குமார், மனைவியை பிரிந்து மீண்டும் திருவள்ளூர் வெள்ளியூருக்கு வந்துள்ளார். கடந்த 3 வருடமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார். 

பி.எஸ்.சி பட்டதாரியாக இருந்து வரும் ஓம் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓம் குமார் பிரபல தனியார் திருமண தகவல் மையத்தில், தனது மனைவி ஜான்சிக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அலைபேசி எண்ணில் தனது மாமனார் பத்மநாபனின் எண்ணை கொடுத்துள்ளார். 

இந்த பதிவை பார்த்த சிலர் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, பத்மநாபனுக்கு தொடர்பு கொண்டு கேட்க, அவர் நான் மகளுக்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யவில்லையே என்று கூறியுள்ளார். தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் விரக்தியடைந்த பத்மநாபன், திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விபரத்தை பெற்று ஓம் குமாரை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvallur Husband Om Kumar Register Wife Photo Matrimony Service Website Takes Revenge Police Arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->