திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளி கைது: விசாரணைக்கு பின் முழு விபரம்.!
Thiruvallur girl sexual assault case accused arrested
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
கடந்த 12-ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று மதியம் பள்ளி முடிந்து, ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, அதே பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, தப்பியோடியுள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர். பல நாட்களாக தேடியும் குற்றவாளி கிடைக்காத நிலையில் அப்பகுதியின் சி.சி.டீ.வீ-யை வைத்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர். அத்துடன், குறித்த நபர் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆந்திரா – சூலூர்பேட்டையில் வடமாநில இளைஞர் சிக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thiruvallur girl sexual assault case accused arrested