கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்!
The mother who acted in a play by killing the child to be carefree with her illicit lover
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரை சேர்ந்தவர் ரகுபதி,இவர் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அபர்ணாஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தமிழ்ச்செல்வி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை அபர்ணாஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தாள்.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைஅறிந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ,தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தினர். அதில், தமிழ்ச்செல்வி தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்ச்செல்வி கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கு தன்னுடன் வேலை செய்யும் 35 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறி பலமுறை அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ அந்த வாலிபரிடம் கேட்டபோது, குழந்தை இல்லாமல் நீ மட்டும் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
குழந்தையை விட கள்ளக்காதலன்தான் தமிழ்ச்செல்விக்கு முக்கியம் என நேற்று தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியுள்ளார். இந்த கொலையில் அவருடைய கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
English Summary
The mother who acted in a play by killing the child to be carefree with her illicit lover