தமிழ்நாடு: பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!
thiruthani school girl abuse case college student arrested
பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த சென்னை கல்லூரி மாணவரை, திருத்தணி போலீஸார் நேற்று (நவ. 29) காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சம்பவம் மற்றும் கைது
திருத்தணி ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், வழக்கம்போல் நான்கு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், திருத்தணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
குற்றவாளி: விசாரணையில், பாலியல் தொல்லை அளித்தவர் திருத்தணியை அடுத்த வீரகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மோகன் (21) என்பதும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்லூரி மாணவர் மோகனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
English Summary
thiruthani school girl abuse case college student arrested